மும்மொழிக் கொள்கை விவகாரம்: மு.க.ஸ்டாலின், விஜய்யிடம் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

1 week ago 3

திருவள்ளூரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

நான் முதல்-அமைச்சரிடம் கேட்கிறேன், தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கும் மும்மொழிக் கொள்கையை எதற்காக அரசுப் பள்ளிகளில் கடைபிடிப்பதில்லை என சொல்லுங்கள்? தாய்மொழி தமிழைதான் பிரதானமாக கற்பிப்போம் என சொல்கிறோம். அதற்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்டால் பதில் இல்லை. முன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேம். இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை.

மாறி வரும் சவால் நிறைந்த உலகில் கூடுதல் மொழியை குழந்தைகள் படிக்கிறோம் என கூறுகின்றனர். உங்களுக்கு என்ன பிரச்சினை? திமுகவுக்கும் திராவிடத்தை சார்ந்தவர்களுக்கு படிப்பு என்றாலே பிரச்சினைதான். சாமானிய மக்களை படியுங்கள் என்று கூறுவது ஆணவமா?

விஜய்யின் படம் தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியாகிறது. மும்மொழிக்கொள்கை, பல மொழிக்கொள்கை உங்கள் வியாபாரத்தில் இருக்கலாம். ஆனால் மும்மொழிக்கொள்கை குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக்கூடாதா? குழந்தைகளின் வருங்காலத்துக்கு பலமொழிக்கொள்கை தேவைப்படும். தனது படங்களை 3 மொழிகளில் வெளியிடும் விஜய், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கலாமா?

2026ஐ நோக்கி பயணித்து வருகிறோம். தமிழகத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். செங்கோல் தமிழக சட்டசபையை அலங்கரிக்கும். பிரதமர் மோடியின் கையால் செங்கோலை வைத்த பின்பு சட்டசபையில் நுழைவோம். இது சபதம்."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Read Entire Article