
சென்னை,
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நிதி அகர்வால். இவர் தெலுங்கில் 'சவ்யசாச்சி' திரைப்படத்திலும், தமிழில் 'ஈஸ்வரன்' திரைப்படத்திலும் அறிமுகமானார்.
ஐஸ்மார்ட் ஷங்கர் மற்றும் கலக தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்போது இவர் பிரபாஸுடன் 'தி ராஜா சாப்' படத்திலும் , பவன் கல்யாணுடன் 'ஹரி ஹர வீரமல்லு' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதில், 'ஹரி ஹர வீரமல்லு' படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியானநிலையில், 'எம்மனச பறிச்சுட்ட'என்ற பாடல் நேற்று வெளியானது. இப்பாடலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிதி அகர்வால், 'பல வருட கடின உழைப்புக்கும் பொறுமைக்கும் பிறகு.. உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்' பதிவிட்டுள்ளார். இப்படம் மார்ச் மாதம் 28-ம் தேதி வெளியாகிறது.