
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை தமிழ்நாடு அரசு ஏற்கும் என்று சொல்லவில்லை. ''பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டம் பற்றி ஆராய ஒரு குழு அமைத்துள்ளோம், அதன் பரிந்துரைகள் அடிப்படையில் முடிவுகள் எடுப்போம்'' என்று தான் 2024 மார்ச் மாதம் 15 ஆம் தேதி அன்றைய தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா , மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தைத்தான் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.
அக்கடிதத்தை படித்தாலே, அதன் அர்த்தம் அனைவருக்கும் புரிந்துவிடும். ஆனால், தமிழ்நாடு அரசு மொழிக்கொள்கையில் நாடகமாடுகிறது என்று கூறுவதெல்லாம் எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. மருத்துவம் பயின்ற அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் கடிதத்தில் உள்ள உண்மையை மக்களுக்கு தெரிவிக்காமல், அவதூறு கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும்வரை அதைப்பற்றி திரும்பத் திரும்ப உரக்கப் பேச வேண்டும் என்பது கோயபல்ஸின் தத்துவம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.