
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் பாரத ரத்னா விருது பெற்றவரான எல்.கே. அத்வானியை, டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், தேசிய சேவை, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான ஒரு தனித்துவ எடுத்துக்காட்டாக அவருடைய வாழ்க்கை அமைந்துள்ளது என குறிப்பிட்டதுடன், ஒவ்வொருவருக்கும் ஊக்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது என கூறியுள்ளார்.
அவருயை ஆசிகளையும், வழிகாட்டுதல்களையும் பெற்றேன். அவருடைய உடல் ஆரோக்கியத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். உங்களுடைய ஆசிகளையும், வழிகாட்டுதல்களையும் நாங்கள் எப்போதும் பெற வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
இதுதவிர, பா.ஜ.க.வின் மற்றொரு மூத்த தலைவரான வி.கே. மல்கோத்ராவையும், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா நேரில் சந்தித்து அவருடைய வாழ்த்துகளை பெற்றார்.