மராட்டிய மாநிலம்: மருத்துவமனையை வெடிக்க வைப்பதாக டாக்டரை மிரட்டிய நபர் மீது வழக்குப்பதிவு

4 hours ago 2

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் டாக்டர் மகேஷ் புல்வானி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு சோமல்வாடா பகுதியில், ரூ.13.50 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால் அந்த நிலம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் ஒப்பந்தம் நிறைவேறாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அதே நிலத்தை வாங்குவதற்கு தானும் ஒப்பந்தம் செய்திருப்பதாக நீரஜ் காந்தி என்ற நபர் டாக்டர் மகேஷிடம் கூறியுள்ளார்.

பின்னர் இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்த்துக் கொள்ள தனக்கு ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பொய்யான புகாரை அளித்து போலீசில் சிக்க வைத்து விடுவேன் என்றும் டாக்டர் மகேஷை நீரஜ் காந்தி மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து 2024-ம் அண்டு ஆகஸ்ட் 26-ந்தேதி டாக்டர் மகேஷுக்கு வாட்ஸ்அப் மூலம் நீரஜ் காந்தி அனுப்பிய குறுஞ்செய்தியில், தனக்கு ரூ.11 கோடி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு டாக்டர் மகேஷ் பதிலளிக்காத நிலையில், சிலிண்டர்கள் ஏற்றிய வாகனத்தை கொண்டு டாக்டர் மகேஷின் மருத்துவமனையை வெடிக்க வைத்து விடுவதாக நீரஜ் காந்தி மிரட்டியுள்ளார்.

இந்த மிரட்டல் தொடர்கதையானதால், இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் டாக்டர் மகேஷ் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நீரஜ் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article