
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, தேசிய கல்விக் கொள்கைப்படி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
பொது நல மனுவை இன்று 09.05.2025 ஆம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல எனவும் கருத்து தெரிவித்து, பொது நல மனுவை தள்ளுபடி செய்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.