மும்பை,
மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் உள்ள குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் நேற்று மாநகர பஸ் விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ், அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோடியது. இதில் 7 பேர் பலியாகினர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தையடுத்து பஸ் டிரைவர் சஞ்சய் மோர் (50) கைது செய்யப்பட்டார்.
பஸ்சில் பிரேக் பிடிக்காததாலேயே விபத்து நடந்ததாக டிரைவர் தெரிவித்துள்ளார். ஆனால், பஸ் விபத்தை நேரில் பார்த்தவர்களோ டிரைவர் போதையில் இருந்தார் எனத் தெரிவித்தனர். இந்தவிபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.