சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியதா பாகிஸ்தான்..?

4 hours ago 1

துபாய்,

8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முன்னதாக பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்து கோலி சாதனை படைத்துள்ளார். 287 இன்னிங்சில் இந்த சாதனையை கோலி படைத்தார். இன்றையை போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது கோலியின் 51-வது சதம் ஆகும். அடுத்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் குரூப் சுற்றில் விளையாடுகிறது.

இந்நிலையில் நடப்பு சாம்பியனான, போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி, 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளது. ஏனெனில் அவர்கள் இதுவரை இரண்டு குரூப் ஏ போட்டிகளில் தோல்வியடைந்து லீக் சுற்றில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர்.

போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கராச்சியில் நியூசிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் அவர்களின் ரன் விகிதமும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இன்று துபாயில் நடந்த இரண்டாவது ஆட்டத்திலும் இந்தியாவிடம் தோல்வியடைந்து மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது பாகிஸ்தான் அணி. ஏனெனில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில் புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் வீழ்ச்சி கண்டுள்ளது.

அவர்கள் தங்கள் அரைஇறுதி சுற்று நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியா மற்றும் வங்காள தேச அணிகளை நம்பியிருக்க வேண்டியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற விரும்பினால், வங்காள தேசமும், இந்தியாவும் தங்கள் அடுத்த போட்டிகளில் நியூசிலாந்தை மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும், இது நடந்தால், நியூசிலாந்து மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு இரண்டு புள்ளிகளுடன் நிறைவு செய்யும். அதன் ரன் ரேட் விகிதம் குறைவாக இருக்கும்.

இதேபோன்று மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு வங்காள தேசத்தையும் இரண்டு புள்ளிகளுடன் வைத்திருக்க, பாகிஸ்தான் வங்காள தேசத்தை மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும், அதே நேரத்தில் புள்ளிகள் பட்டியலில் வங்காள தேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுடனும் தலா இரண்டு புள்ளிகளுடன் சமன் செய்ய வேண்டும்.

இவ்வாறு பாகிஸ்தானின் திட்டப்படி எல்லாம் நடந்தால், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் புள்ளிகள் பட்டியலில் சமநிலையில் இருக்கும். இறுதியாக, இந்தியாவுடன் சேர்ந்து சிறந்த ரன் ரேட் விகிதத்தைக் கொண்ட அணி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் குரூப் ஏ-வில் இருந்து இரண்டாவது அரையிறுதி போட்டியாளராக மாறும் சூழல் ஏற்படும்.

மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து, மீதமுள்ள இரண்டு போட்டிகளில் (வங்கதேசம் அல்லது இந்தியா) ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட, அது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் பாகிஸ்தானின் அரைஇறுதி கனவுக்கு முடிவுரை எழுதி விடும்.

நியூசிலாந்து அணி நாளை (திங்கட்கிழமை) ராவல்பிண்டியில் வங்காள தேசத்தை எதிர்கொள்ள உள்ளது. அந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால், வங்காள தேச அணிக்கு எதிரான கடைசி சுற்று போட்டியில் விளையாடுவதற்கு முன்பே பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கான பந்தயத்திலிருந்து வெளியேற்றப்படும்.

Read Entire Article