மும்பையில் கள்ளநோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய முயன்றவர் மீது வழக்கு

1 month ago 4

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கடாவ்லியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், அந்தப்பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கிக்கு கடந்த 3-ந்தேதி பணத்தை டெபாசிட் செய்வதற்காக சென்றார். அப்போது அந்த நபர் 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ.45 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கொடுத்துள்ளார்.

இதனை சரிபார்த்த போது அந்த நபர் கொடுத்த பணம் கள்ளநோட்டு என தெரியவந்தது. இது சம்பந்தமாக வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த நபர் மீது டோம்பிவிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளநோட்டு களை அவர் எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Read Entire Article