மும்பையிலுள்ள பிரபல சாலைக்கு நடிகை ஸ்ரீதேவியின் பெயர்

3 months ago 23

மும்பை ,

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற இவர், பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகளான ஜான்வி கபூரும் தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்ற ஸ்ரீதேவி, அங்கு குளியலறையில் தவறி விழுந்து மரணமடைந்தார்.

இதனையடுத்து ஸ்ரீதேவியின் நினைவைப் போற்றும் விதமாகவும், அவரை கவுரவப்படுத்தும் வகையிலும் மும்பை மாநகராட்சி, லோகண்ட்வாலா சந்திப்புக்கு ஸ்ரீதேவி கபூர் சவுக்' என பெயரிடுவதாக அறிவித்திருந்தது.

இந்தப் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில்தான் ஸ்ரீதேவி வசித்து வந்தார். இந்நிலையில் இந்த பெயர் பலகைத் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. அதனை போனி கபூர் திறந்து வைத்து ஸ்ரீதேவியின் புகைப்படத்தை வணங்கினார். அந்த நிகழ்வில் அவரது மகள் குஷி கபூர், மூத்த நடிகை ஷபானா ஆஸ்மி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article