மும்பைக்கு பறந்த "தக் லைப்" படக்குழு

6 hours ago 4

மும்பை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

'தக் லைப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் 'ஜிங்குச்சா' பாடல் யூடியூபில் 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. 'தக் லைப்' படத்தின் டிரெய்லர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. 

இந்நிலையில், 'தக் லைப்' படத்தின் இந்தி டிரெய்லர் வெளியீட்டிற்காக கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட 'தக் லைப்' படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். 

LOCKED, LOADED & LANDEDThe THUGS are in Mumbai for the trailer launch at 7pm today #PVRJuhu #ThuglifeAudioLaunch from May 24ThuglifeTrailer➡https://t.co/Xy1tm87OuO#Thuglife#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR #IMAXA #ManiRatnam FilmAn @arrahman Musical… pic.twitter.com/Pmvgy1c0PD

— Raaj Kamal Films International (@RKFI) May 20, 2025
Read Entire Article