மத்திய பிரதேச மந்திரியை விசாரிக்க 3 போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைப்பு

4 hours ago 3

போபால்,

கா்னல் சோபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச பா.ஜ.க. மந்திரி விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையானது. 'பகல்காமில் நமது சகோதரிகளின் குங்கு மத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்' என்று அவர் கூறி இருந்தாா்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசா ரித்த மத்திய பிரதேச ஐகோர்ட்டு மந்திரி விஜய் ஷா மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆா்) பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அவா் மீது கடந்த 14-ந் தேதி இந்தூா் மாவட்டத்தில் எப்.ஐ.ஆா். பதிவு செய்யப் பட்டது. ஐகோர்ட்டு உத்தரவை எதிா்த்து விஜய் ஷா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூா்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது தனது கருத்துக் காக மந்திரி விஜய் ஷா தரப்பில் மன்னிப்பு கோரப் பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், 'மந்திரி விஜய் ஷா முதலைக் கண்ணீா் வடிக்கி றாரா அல்லது சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறாரா என யோசிக்கத் தோன்று கிறது. மோசமான மொழி யில் ஆவேசமாகப் பேசி விட்டு, பின்னா் மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இப்படிப் பேசியதற்கு வெட்கப்பட வேண்டும்' என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மத்தியபிரதேச ஐகோர்ட்டு பிறப்பித்த உத் தரவின் அடிப்படையில் ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி தலைமையில் சிறப்பு விசா ரணைக் குழுவை (எஸ்.ஐ.டி.) இன்று காலை 10 மணிக்குள் அமைக்க வேண்டும் என்றும், எஸ்.ஐ.டி. தனது முதல் நிலை அறிக்கையை வருகிற 28-ந்தேதிக்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என் றும் சுப்ரீம் கோர்ட்டு உத் தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை தொடர்ந்து மத்தியபிரதேச மாநில போலீஸ் டி.ஜி.பி. சிறப்பு விசாரணைக்குழுவை இன்று காலை அமைத்தார்.இந்த விசாரணை குழுவில் போலீஸ் ஐ.ஜி. பிரமோத் வர்மா, டி.ஐ.ஜி. கல்யாண் சக்கரவர்த்தி, பெண் அதிகாரியும், சூப் பிரண்டுமான வாகினி சிங் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். சிறப்பு விசாரணைக் குழு மத்தியபிரதேச மந்திரி விஜய் ஷா விடம் விசாரணை நடத்தி தனது முதல்கட்ட அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்கும்.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்ட னத்தை தொடர்ந்து மந்திரி பதவியில் இருந்து விஜய் ஷா விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பதவி விலகாவிட்டால் அவரை பதவி நீக்க வேண் டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள் ளன. இதனால் அவர் பதவி விலகுவாரா? என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பா.ஜனதா தலைவர் ஒருவர் கூறும் போது, 'சிறப்பு விசார ணைக்குழுவின் அறிக் கைக்கு பிறகே இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

Read Entire Article