மும்பை பயங்கரவாத தாக்குதல்: ராணா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

4 hours ago 2

மும்பை,

நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் கடந்த 2008 ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 170 பேர் கொல்லப்பட்டனர். மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹவுர் உசேன் ராணாவை அண்மையில் அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது. இதையடுத்து கடந்த  ஏப்ரல் மாதம் இந்தியா கொண்டு வரப்பட்டார் அவரிடம் தேசிய புலனாய்பு படையினர் கடந்த 18 நாட்களாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர் பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் பயின்றதாகவும், அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியதாகவும், இந்த நேரத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ். அமைப்புக்கு உதவிட இந்தியா சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் ராணுவத்திற்காக உளவு பார்த்ததாகவும், வளைகுடாப் போரில் தனக்கும் பங்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மும்பையில் 2008 ல் தாக்குதல் நடத்தலுக்கு முன்னர் 2 நாட்கள் தங்கி இருந்ததாகவும், பயங்கரவதி ஹெட்லியுடன் தொடர்பில் இருந்தேன் என்றும்,டெல்லி, புனே,கோவா, என பல நகரங்களை சுற்றி வந்து நோட்டமிட்டதாகவும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Read Entire Article