மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - பேட் கம்மின்ஸ்

1 day ago 2

மும்பை,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி 18.1 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சுலபமானதாக இல்லை. நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும். இது கடினமான ஆடுகளம்தான்.

நாங்கள் இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது போல் இல்லை. நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும்.

மும்பை அணியின் பந்துவிச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். எங்கள் அணியில் எந்த குறையும் இல்லை. ஆனால் 160 ரன்கள் என்பது இந்த ஆட்டத்தில் குறைவானது இலக்காக மாறிவிட்டது. பந்துவீச்சிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்று நினைக்கின்றேன்.

எனினும் இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெற விக்கெட்டுகள் தேவை. இம்பாக்ட் வீரர் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள்தான் வீச முடியும் என்று எனக்கு தெரியும். இதனால் தான் நாங்கள் ராகுலை தேர்வு செய்தோம். இந்த சூழலில் இருந்து இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக இந்த சீசனில் எங்களுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. தற்போது எங்களுக்கு சிறிய ஒரு பிரேக் கிடைத்து இருக்கிறது. இதில் நாங்கள் என்ன தவறு செய்கின்றோம், எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்துவோம்" என்று தெரிவித்தார். 

Read Entire Article