மும்பை: டபிள்யூடி மும்பை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியின் 5வது தொடர் இன்று தொடங்குகிறது. மும்பையின் கிரிக்கெட் கிளப் வளாகத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் தர்ஜா செமனிஸ்டஜா (லாத்வியா), தட்ஜனா மரியா (ஜெர்மனி), ஹரியட் தர்ட் (கிரேட் பிரிட்டன்), நூரியா பாரிசாஸ் (ஸ்பெயின்), ஜில் டெய்க்மன் (சுவிட்சர்லாந்து, ரெபாகா மரினோ (கனடா) உள்ளிட்ட சர்வதேச வீராங்கனைகள் களம் காண உள்ளனர். இந்தியாவின் சர்வதேச வீராங்கனைகளான ருதுஜா போஸ்லே, அங்கிதா ரெய்னா, சஹனா யமலபள்ளி, ஸ்ரீவள்ளி பாமிடிபட்டி ஆகியோரும் விளையாட உள்ளனர்.
The post மும்பை ஓபன் தொடர் இன்று துவக்கம் appeared first on Dinakaran.