
இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக நடந்து வந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.