'முபாசா: தி லயன் கிங்' தமிழில் டப்பிங் பேசிய நடிகர்கள் வீடியோ வெளியீடு

4 months ago 17

காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து 1994 -ம் ஆண்டு 'தி லயன் கிங்' என்ற பெயரில் கார்டூன் டெக்னாலஜியிலும், அதே பெயரில் 2019-ம் ஆண்டு அனிமேஷன் தொழில்நுட்பத்திலும் படங்கள் வெளியாகின.இந்த லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது, சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து முபாசா : தி லயன் கிங் படம் உருவாகியுள்ளது. பேரி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. காட்டுக்கே ராஜாவான முபாசா கடந்து வந்த பாதையையும், அதன் சகோதரனான ஸ்காரையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தி வெர்ஷனுக்காக ஷாருக்கான், அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோர் டப்பிங் பேசியிருக்கின்றனர்.

தெலுங்கில் முன்னணி நடிகர் மகேஷ் பாபு முபாசாவுக்கு குரல் கொடுத்துள்ளார்.

தமிழ் மொழிக்கான டப்பிங்கை அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், சிங்கம் புலி, ரோபோ சங்கர், விக்னேஷ், நாசர் உள்ளிட்டோர் செய்துள்ளனர். முபாசா கதாபாத்திரத்துக்கு அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

They bring life to our favourite characters by their voice! Presenting the voices in Tamil#Mufasa : The Lion King, only in cinemas this friday! pic.twitter.com/vF442PA5TH

— Walt Disney Studios India (@DisneyStudiosIN) December 16, 2024

'முபாசா: தி லயன் கிங்' திரைப்படம் வருகிற 20-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் திரைக்கு வரவுள்ளது.

Read Entire Article