
சிம்லா,
இமாச்சலபிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் உள்ள ரோகத்கட் சுற்றுலா தலத்திற்கு இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 5 பேர் பயணித்தனர்.
மணாலி - ரோகத்கட் நெடுஞ்சாலையில் ராணி நல்லா என்ற மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.