முன்னேறிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை உயர்கல்வியில் தமிழகம் பெற வேண்டும்: அமைச்சர் கோவி. செழியன்

1 month ago 4

சென்னை: முன்னேறிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை உயர்கல்வியில் தமிழகம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உயர்கல்வித்துறைக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வுக் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையின் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தப்பட்டு மாணவர்களின் கல்வித் திறனை மேலும் மேன்மை அடையச் செய்திடும் வழியில் உயர்கல்வித்துறை பங்களிப்பாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் கருத்தினைப் பெற்றுச் செயல்படுத்திட முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Read Entire Article