முன்னாள் வீரர் கனேரியா கணிப்பு: பாக்.கிற்கு வாய்ப்பில்ல ராஜா… துபாயில் குவிந்த ரசிகர்கள்

2 months ago 9

‘இந்தியாவை பாகிஸ்தான் வெல்வதற்கான வாய்ப்பே கிடையாது’ என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஸ் கனேரியா ஆணித்தரமாக கூறியுள்ளார். கனேரியா கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவிய பின், இந்தியாவில் நடந்த ஒயிட் பால் தொடர் போட்டிகளில் இங்கிலாந்து அணியை இந்தியா அபாரமாக ஆடி வீழ்த்தி உள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோஹ்லியும் ஃபார்முக்கு திரும்பி விட்டதால் இந்திய அணியின் தன்னம்பிக்கை பெரியளவில் அதிகரித்துள்ளது. முகம்மது ஷமியும் அணிக்கு திரும்பி தனக்கு எதிரான விமர்சனங்களை வாயடைக்கச் செய்துள்ளார்.

இப்படிப்பட்ட இந்தியாவை வெல்வது பாகிஸ்தானால் இயலாத காரியம். இந்தியாவின் சுழல் பந்து வீச்சு, பாகிஸ்தானுக்கு பெரிய சவாலாக அமையும். ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்ற திறமையான இடது கை சுழல்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது பாகிஸ்தானின் பாபர் அஸமிற்கு சிரமமாக இருக்கும். அதேசமயம், திறமையான சுழல்பந்து வீச்சாளர்கள் யாரும் பாக். அணியில் இல்லை. துபாய் மைதானம் வறண்டு காணப்படும். பந்துகள் மெதுவாகவே எழும். ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சூழலிலும் இந்திய பந்து வீச்சாளர்களை இதுபோன்ற மைதானத்தில் பாக்.கால் எதிர்கொள்ள இயலாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post முன்னாள் வீரர் கனேரியா கணிப்பு: பாக்.கிற்கு வாய்ப்பில்ல ராஜா… துபாயில் குவிந்த ரசிகர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article