முன்னாள் ராணுவ துணை தளபதி மறைவு; 42 குண்டுகள் முழங்க அஞ்சலி

6 hours ago 2

ஊட்டி: நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன் (78). தனது 40 ஆண்டு சேவைக்குப் பிறகு, 2006ல் ராணுவ துணை தளபதியாக இருந்து ஓய்வு பெற்றார். இதன் பிறகு இவர் குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் உடல் நிலை பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக நேற்று எடுத்து வரப்பட்டு 42 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது.

The post முன்னாள் ராணுவ துணை தளபதி மறைவு; 42 குண்டுகள் முழங்க அஞ்சலி appeared first on Dinakaran.

Read Entire Article