முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் நினைவு நாள்; எடப்பாடி பழனிசாமி மரியாதை

3 hours ago 2

மறைந்த நடிகரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன். இவர் 1988ம் ஆண்டு 23 நாட்கள் தமிழகத்தின் முதல்-அமைச்சராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, ஜானகி ராமச்சந்திரன் 1996 மே 19ம் தேதி உயிரிழந்தார்.


இந்நிலையில், அவரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடப்பாடி பழனிசாமி , ஜானகி ராமச்சந்திரனுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

முன்னாள் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியாருமான ஜானகி ராமச்சந்திரனின் நினைவு நாளான இன்று, புரட்சித்தலைவரின் தொண்டர்கள் மீதான அவர்தம் அளவற்ற அன்பையும் , அளப்பரிய தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Read Entire Article