டெல்லி : ஆளுநர்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை முடக்க ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து முயற்சி செய்வதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசு தலைவர் மூலம் விளக்கம் கேட்ட ஒன்றிய பாஜக அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க ஒன்றிய அரசு விரும்புகிறதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது குரலை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வழிமொழிந்துள்ளார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி மொழி, கலாச்சாரம் உள்ளது. எனினும் இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. ஆனால், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் முடக்க ஒன்றிய பாஜக முயற்சித்து வருகிறது. இது கூட்டாட்சியின் மீதான ஆபத்தான தாக்குதல், இதை எதிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
The post ஆளுநர்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை முடக்க ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து முயற்சி : ராகுல் காந்தி தாக்கு appeared first on Dinakaran.