முன்னாள் டிஜிபி வீட்டில் சிறுவனை கட்டிப்போட்டு கொள்ளை

1 week ago 4

புளியங்குடி: தென்காசி மாவட்டம், புளியங்குடி, நடு கருப்பழகு தெருவில் தமிழக முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இதில் அவரது உறவினரான அப்பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் (57) என்ற விவசாயி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ராஜி (47). இவர்களுக்கு ரேகா (15) என்ற மகளும், பூபேந்திர பொன்ராஜன் (13) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் ரேகா அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பும், பூபேந்திர பொன்ராஜன் 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் காலை அமிர்தராஜ், வழக்கம்போல் வயலுக்கு சென்றார். நண்பகல் 12 மணி அளவில் ராஜி வெளியூரில் உள்ள தனது தந்தையை பார்க்கச் சென்றார். இதேபோல் ரேகா, பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பில் பங்கேற்ற சென்றார். இதனால் வீட்டில் சிறுவன் பூபேந்திர பொன்ராஜன் மட்டும் தனியாக இருந்துள்ளான்.

அப்போது, டீ ஷர்ட், மங்கி குல்லா அணிந்து முகத்தை மறைத்தவாறு வந்த 2 பேர், சிறுவன் மீது ஸ்பிரே அடுத்து கட்டிப்போட்டு பீரோவில் இருந்த ரூ.51 ஆயிரத்து 500-ஐ கொள்ளையடித்து தப்பினர். பிற்பகல் 3.30 மணி அளவில் வெளியூரில் இருந்து வீடு திரும்பிய ராஜி, சிறுவன் கட்டிப் போடப்பட்டு வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்

The post முன்னாள் டிஜிபி வீட்டில் சிறுவனை கட்டிப்போட்டு கொள்ளை appeared first on Dinakaran.

Read Entire Article