போடி, பிப். 8: தேனி மாவட்டம், எரணம்பட்டி, பங்காருசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (27). இதே பகுதியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் பிரதீப்குமார் சங்கராபுரத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த சரவணக்குமார், பிரதீப்குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த பிரதீப்குமார் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பிரதீப்குமார் போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து, சரவணக்குமாரை கைது செய்தார்.
The post முன் விரோதம் காரணமாக வாலிபரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.