சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் மொத்த தேர்ச்சி வீதம் 93.66%

6 hours ago 3

சென்னை: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி வீதம் 93.66%. மண்டல வாரியாக திருவனந்தபுரம் 99.79% சதவீத தேர்ச்சியை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் 98.71% பெற்று 4வது இடத்தில் உள்ளது. மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் 92.63 சதவீதமும், மாணவியர் 95.00 சதவீதமும் பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 2.37 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

  • சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 353 பேர்(5.96%) மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
  •  சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் நாடு முழுவதும் 38 மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 103354 மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 103259 பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 56008 பேர் மாணவர்கள். 47251 பேர் மாணவியர். அதில் 103117 பேர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 55911 பேர் மாணவர்கள், 47206 பேர் மாணவியர். இதில் மாணவர்கள் தேர்ச்சி வீதம் 99.83%, மாணவியர் தேர்ச்சி வீதம் 99.90%, மொத்த தேர்ச்சி வீதம் 99.86% ஆகும்.

சென்னை: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:

  • சென்னையில் இயங்கும் பள்ளிகளின் மூலம் 1லட்சத்து 18 ஆயிரத்து 688 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர்.
  • அவர்களில் மாணவர்கள் 63634 பேர், மாணவியர் 55054 பேர்.
  • தேர்வில் பங்கேற்றவர்கள் மொத்தம் 118489 பேர். அவர்களில் மாணவர்கள் 63524, மாணவியர் 54965 பேர்.
  • மொத்த தேர்ச்சி வீதம் 98.71%, மாணவர்கள் 98.66%, மாணவியர் 98.76%

The post சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் மொத்த தேர்ச்சி வீதம் 93.66% appeared first on Dinakaran.

Read Entire Article