முந்திரி மட்டன் கிரேவி

1 day ago 3

தேவையான பொருட்கள்

1 கிலோ மட்டன்
2வெங்காயம்
1/2 தக்காளி
3 பச்சை மிளகாய்
50மில்லி தயிர்
100மில்லி தேய்ங்காய் எண்ணெய்
100மல்லி நெய்
10 கிராம் முந்திரி
2 டீஸ்பூன் கச கச
8 ஏலக்காய்
4லவங்கம்
2துண்டு பட்டை
2பிரிஞ்சி இலை
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
4 டீஸ்பூன் மிளகாய் தூள்
2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் மல்லி தூள்
1 டீஸ்பூன் சீரக தூள்
1 டீஸ்பூன் சோம்பு தூள்
சிறிதளவுகருவேப்பிலை
தேவையானஅளவு உப்பு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும்,பட்டை,ஏலக்காய், கருவேப்பிலை, லவங்கம்,பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி,வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.மட்டனை கழுவி கொஞ்சம் மிளகாய் தூள்,தயிர்,வெங்காயம், கருவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.வெங்காயம் வதங்கியதும் கிளறி வைத்த மட்டனை சேர்த்து,மல்லி தூள்,சீரக தூள்,சோம்பு தூள்,மஞ்சல் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வேக விடவும்.கடைசியில் முந்திரி மற்றும் கச கச பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.

The post முந்திரி மட்டன் கிரேவி appeared first on Dinakaran.

Read Entire Article