முத்துவாஞ்சேரி கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் மறியல்

2 months ago 7

தா.பழூர், டிச. 5: அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறி காலி குடங்களுடன் புரந்தான் – அரியலூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. முத்துவாஞ்சேரி வடக்கு தெரு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறுகின்றனர். மேலும், தண்ணீர் எடுக்க வெகு தூரம் நடந்து சென்று எடுத்து வர வேண்டிய சூழல் இருப்பதால் சாலைகள் முழுவதும் சேரும் சகதியுமாக உள்ளதால், மக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் கிராமத்தினர் 50க்கும் மேற்பட்டோர் புரந்தான்-அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து, 11 மணியளவில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், புரந்தான் -அரியலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது.

The post முத்துவாஞ்சேரி கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் மறியல் appeared first on Dinakaran.

Read Entire Article