முத்துப்பேட்டை அருகே ஸ்ரீதேவி காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

1 week ago 3

முத்துப்பேட்டை, நவ.8: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் ஊராட்சி செறுபனையூர் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீதேவி காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 4-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை மகா சங்கல்பம் மகா கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம் பூர்ணாஹூதி தீபாராதனையுடன் தொடங்கி மாலை வாஸ்து சாந்தி யாகசாலை பிரவேசம் முதல் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கி 4ம் கால பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹூதி தீபாராதனை யாத்ராதானம் முடிந்து கடம் புறப்பாடு நடைபெற்று விமானம் மற்றும் மூலஸ்தானம் ஸ்ரீ விநாயகர் பிரசித்திபெற்ற ஸ்ரீதேவி காளியம்மன் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

தொடர்ந்து மகா தீபாராதனை அருட்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். விழாவில் வட்டார வேளாண்மை குழு உறுப்பினர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகையன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கிராம முக்கியஸ்தர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post முத்துப்பேட்டை அருகே ஸ்ரீதேவி காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Read Entire Article