முத்துப்பேட்டை, பிப். 15: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவுப்படி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் சங்கீதா, காசநோய் பிரிவு துணை இயக்குநர் டாக்டர் புகழ் ஆகியோர் அறிவுரைப்படி மக்களை தேடி மருத்துவமுகாம் நேற்று நடைபெற்றது.
இதில் மக்களுக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையானவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. தேசிய காசநோய்த்தடுப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் ந தொடர் விழிப்புணர்வு நடவடிக்கையின் கீழ்நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் 100 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு காசநோய் உள்ளிட்ட தொற்று நோய்த்தடுப்பு குறித்து நலக்கல்வி அளிக்கப்பட்டது.
இந்த முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராசேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், செந்தில், சிக்கல்வேலன், கதிரவன், பாலசண்முகம் சுகாதார செவிலியர் ஜெயா, காசநோய் சிகிச்சை முதுநிலை மேற்பார்வையாளர். விக்னேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் எக்ஸ்ரே டெக்னீசியன் பாபு, இடைநிலை சுகாதார செவிலியர்கள் இமயா, பரமேஸ்வரி மற்றும் பெண் தன்னார்வலர்கள, மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post முத்துப்பேட்டை அருகே மக்களை தேடி மருத்துவ முகாம் appeared first on Dinakaran.