முதுகுளத்தூர் அருகே புறக்காவல் நிலையம் திறப்பு

6 months ago 17

சாயல்குடி, நவ.12: முதுகுளத்தூர் அருகே காக்கூரில் அமைக்கப்பட்ட புதிய புறக்காவல் நிலையத்தை எஸ்.பி சந்தீஷ் திறந்து வைத்தார். முதுகுளத்தூர் காவல் உட்கோட்ட எல்லையில் காக்கூர் கிராமம் அமைந்துள்ளது. கமுதி, முதுகுளத்தூரில் இருந்து ராமநாதபுரம் செல்ல பிரதான சாலையாக உள்ளது.

இந்த சாலை வழித்தடத்தில் உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர், புகழ் பெற்ற மரகத நடராஜர் கோயில், வராஹி அம்மன் கோயில், திருப்புல்லாணி பத்மாஷினி தாயார் சமேத ஆதிஜெகநாத பெருமாள் கோயில் ஆகிய முக்கிய கோயில்கள் அமைந்துள்ளதால் போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. மேலும் இப்பகுதியில் அடிக்கடி சிறு,சிறு பிரச்னைகள் நடப்பது வழக்கம். இதனையடுத்து காக்கூர் சமத்துவபுரம் அருகே தற்காலிக போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது.

இப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, ரோந்திற்கு புறக்காவல் அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. மேலும் சாலை பகுதியில் நவீன உயர்தர சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டது. இதனை நேற்று ராமநாதபுரம் எஸ்.பி சந்தீஷ் திறந்து வைத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், முதுகுளத்தூர், தேரிருவேலி, எஸ்.ஐக்கள், தனிப்பிரிவு போலீசார் மாடசாமி மற்றும் காக்கூர், புளியங்குடி சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 

The post முதுகுளத்தூர் அருகே புறக்காவல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article