* குறிப்பிட்ட இடைவெளியில் முதியவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து, தன் குறைபாடுகளை கண்டறிய வேண்டும்.
*பார்வையில் குறைபாடு இருந்து, பொருத்தமற்ற கண்ணாடி அணிந்திருந்தால் கீழே விழ வாய்ப்புண்டு.
*காதில் அழுக்கு சுத்தம் செய்யப்படாதிருந்தால் நிலை தடுமாறக்கூடும்.
* டாக்டர் ஆலோசனையின்றி மருந்துகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. சில மருந்துகளின் பக்க விளைவால் கூட கீழே விழலாம்.
* மது அருந்தக் கூடாது.
*படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து உடனே நடக்கக்கூடாது. மெல்ல அமர்ந்து சற்றுநேரம் கழித்து நின்று, பின் நடக்க வேண்டும்.
*மற்றவர்கள் கிண்டல் செய்யக்கூடும் என தயங்காமல் வாக்கிங் ஸ்டிக், அல்லது ஃப்ரேம் பயன்படுத்தவும்.
*பொருத்தமான காலணிகளை அணிய வேண்டும்.
*உடற்பயிற்சி தசைகள், மூட்டுக்கள் திறனை மேம்படுத்துவதால், தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
*படுக்கையறை, குளியலறை, படிக்கட்டுகளில் போதுமான வெளிச்சம் இருக்கிறதா என உறுதி செய்ய வேண்டும்.
*செல்ஃபோன், பேனா, கண்ணாடி, மாத்திரை டப்பா, தலைவலி தைலம் போன்ற அன்றாடம் பயன்பாட்டில் உள்ள பொருட்களை கைக்கெட்டும் தூரத்தில் வைத்திருக்க வேண்டும்.
*குளியலறை, கழிப்பறை, படிக்கட்டுகளில் இரும்புக் கைப்பிடிகள் பொருத்த வேண்டும்.
*குளியலறைத் தரை பாசிபடராமல், தண்ணீர் தேங்காமல், அதிக வழுவழுப்பில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
*மருத்துவமனை, நடைப்பயிற்சி உள்ளிட்ட வேலைகளில் கூடுமானவரை வீட்டுப் பெரியவர்களுடன் யாரேனும் துணைக்கு செல்வது நல்லது.
*வீட்டிற்கு அருகாமை என்றாலும்கூட அதிக கூட்டநெரிசல் நிறைந்த காலை மற்றும் மாலை நேரங்களில் தனியாக வீட்டுப் பெரியவர்களை வெளியில் செல்ல அனுமதிப்பதை தவிர்த்துவிடுங்கள்.
*அவ்வப்போது அவர்களின் நண்பர்களை சந்தித்து பழங்கால நினைவுகளை பேசி மகிழும் தருணங்களை ஏற்படுத்துங்கள்.
*வாரம் ஒரு முறையாவது வீட்டுப் பெரியவர்களுடன் குடும்பமாக அமர்ந்து பேசி மகிழும் அல்லது சாப்பிடும் தருணங்களை உருவாக்குங்கள்.
– கே. குருமூர்த்தி, சென்னை.
The post முதியவர்கள் கீழே விழுவதை தடுக்க… appeared first on Dinakaran.