முதல்வரின் சாலை திட்டத்தில் ரூ.158 கோடியில் 292 சாலை பணிகள்

1 day ago 1

ராமநாதபுரம், ஜன.30: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் ரூ.158 கோடி மதிப்பில் 345 கிலோ மீட்டர் தூரத்திற்கு 292 பணிகள் முடிந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, நயினார்கோயில், போகலூர், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி மற்றும் மண்டபம் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த சாலைகள், தேவைப்படும் இடங்களில் புதிய சாலைகள் அமைப்பதற்கு ஆய்வு செய்யப்பட்டது.

பிறகு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அவை முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சேர்க்க ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, தேர்வு செய்யப்பட்டது. தேர்வான இடங்களில் சாலை அமைப்பதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 26 கிராம சாலைகளும், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 35 கிராம சாலைகளும், ராமநாதபுரம் ஊராட்சிஒன்றியத்தில் 25 கிராம சாலைகளும், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் 26 கிராம சாலைகளும், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் 36 கிராம சாலைகளும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் 30 கிராம சாலைகளும், கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 22 கிராம சாலைகளும், போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம சாலைகளும், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 17 கிராம சாலைகளும், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம சாலைகளும், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 22 கிராம சாலைகளும் என மொத்தம் 292 சாலை திட்டப்பணிகள் தேர்வு செய்து ரூ.158 கோடி மதிப்பீட்டில் 345 கிலோ மீட்டரில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பாண்டிற்கு புதிதாக சாலைகள் அமைக்க திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முடிந்த பிறகு ஏப்ரல் மாதத்தில் சாலை அமைக்கும் பணி துவங்கும். முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலையால் கிராமப் பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் மற்றும் விவசாய பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகள் பொதுமக்களுக்கு மிக பயனுள்ளதாக இருந்து வருகிறது.

The post முதல்வரின் சாலை திட்டத்தில் ரூ.158 கோடியில் 292 சாலை பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article