அண்ணாவின் 56வது நினைவு நாள் முதல்வர் தலைமையில் பிப்.3ல் அமைதி பேரணி: சென்னை மாவட்ட திமுக அறிவிப்பு

3 hours ago 1

சென்னை: அண்ணாவின் 56வது நினைவுநாளை ஒட்டி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.3ம் தேதி அமைதி பேரணி நடைபெறும் என சென்னை மாவட்ட திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: அண்ணாவின் 56வது நினைவு நாளினையொட்டி, முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சி முன்னணியினர் பிப்ரவரி 3ம் தேதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். முன்னதாக, வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து அமைதி பேரணி புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். இதில், முன்னாள் – இந்நாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து பிரிவு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணாவின் நினைவை போற்றுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அண்ணாவின் 56வது நினைவு நாள் முதல்வர் தலைமையில் பிப்.3ல் அமைதி பேரணி: சென்னை மாவட்ட திமுக அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article