முதல் டி20 போட்டி: இந்தியா - வங்காளதேசம் நாளை மோதல்

3 months ago 26

புதுடெல்லி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா-வங்காளதேசம் இடையேயான 3 போட்டி கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டம் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் நாளை ( 6-ந் தேதி) நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரையும் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

டெஸ்ட் தொடரை இழந்த நஜூமுல் உசேன் ஷான்டோ தலைமையிலான வங்காளதேச அணி டி20 தொடரை வெல்ல தீவிரம் காட்டும். நாளை போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Read Entire Article