முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பகல் கனவு காண்கிறார் - எடப்பாடி பழனிசாமி

3 months ago 12

சேலம்,

அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம், சேலம் மாவட்டம் வனவாசியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

நான் கனவு காண்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அவர்தான் பகல் கனவு காண்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எந்த சரிவும் இல்லை, தி.மு.க.வுக்குதான் சரிவு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் பொறுப்பு வாங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்துள்ளார்.

தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டிக் கொள்கிறார். பொய்யை பொருந்துவது போல் கூறினால் உண்மை திருதிருவென்று விழிக்கும் என்பது போல் முதல்வர் பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு.

தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் கட்சியின் உயர் பொறுப்புக்கு வர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

#JUSTIN || "நான் கனவு காணவில்லை, முதல்வர் ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார்"

"அதிமுகவுக்கு எந்த சரிவும் இல்லை, திமுகவுக்கு தான் சரிவு ஏற்பட்டுள்ளது"

"அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது"

"நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு"

"பெரிய அளவில் கூட்டணி இல்லாமலேயே அதிமுக… pic.twitter.com/br3BznPzr7

— Thanthi TV (@ThanthiTV) October 23, 2024

Read Entire Article