முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

8 months ago 49

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், 8-ந்தேதி(இன்று) காலை 11 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. அமைச்சரவையில் புதிதாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில், துறை ரீதியான அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய திட்டங்கள், கொள்கைகள் குறித்தும், வளர்ச்சித் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Read Entire Article