முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து

3 hours ago 1

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முதல்-அமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில், "எனது சகோதரரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம்.

நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

Read Entire Article