சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பங்கேற்பதில் சிக்கல்

3 hours ago 2

லாகூர்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'பி' பிரிவில் லாகூரில் நேற்று நடந்த அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 273 ரன் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக செதிகுல்லா அடல் 85 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டும், ஆடம் ஜம்பா, ஸ்பென்சர் ஜான்சன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 274 ரன் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. டிராவிஸ் ஹெட் 59 ரன்களுடனும் (40 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் ஸ்டீவன் சுமித் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது. அதற்குள் மைதானத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. மழை நின்றாலும் தண்ணீரை உடனடியாக அகற்ற முடியவில்லை. 2-வது இன்னிங்சில் 20 ஓவர் வரை நடந்திருந்தால் டக்வொர்த்- லீவிஸ் விதிப்படி முடிவு அறிவிக்கப்பட்டு இருக்கும். அதற்கும் வழியில்லாமல் போனதால் இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தார். ஆஸ்திரேலிய அணி 4 புள்ளியுடன் அரைஇறுதி முன்னேறியது. ஆப்கானிஸ்தான் 3 புள்ளியுடன் இருக்கிறது.

இந்த ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன மேத்யூ ஷார்ட் பீல்டிங் செய்கையில் காயமடைந்தார். இதனால் இவர் எதிர்வரும் அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. அவருக்கு பதிலாக ஜேக் பிரெசர் மெக்குர்க் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Read Entire Article