முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் 402 குடியிருப்புகள் விற்பனை

1 month ago 7

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.217.95 கோடி மதிப்பீட்டில் 402 குடியிருப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, வீடு, மனைகளை தவணை முறையில் வழங்கும் நடைமுறையை மொத்தமாக கைவிட, வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வீட்டு வசதி வாரியம் சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த, நடுத்தர, உயர் வருவாய் என, பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு, வீடு, மனைகள் ஒதுக்கப்பட்டு வந்தன.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் வீடு, மனைகளை விற்பனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மக்களிடம் இருந்து தவணை தொகையை வசூலிப்பதில், வாரியத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

இதனால், வீடுகளின் விலையை, 20 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடு, மனைகளை தவணை முறைக்கு பதிலாக, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இதுவரை முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.217.95 கோடி மதிப்பீட்டில் 402 குடியிருப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

The post முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் 402 குடியிருப்புகள் விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article