சென்னை: 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை டெல்லி அணி வீழ்த்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77, அபிஷேக் போரல் 33 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக கலில் அகமது 2, நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, மதிஷா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
தொடர்ந்து 184 ரன்கள் அடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 69, தோனி 30 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் டெல்லி அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டெல்லி அணி முதலிடம் பிடித்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை டெல்லி அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் தோல்வி
சென்னை அணி மும்பை அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதன்பின்னர் நடைபெற்ற பெங்களூரு, ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அடுத்தடுத்து 3 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
The post 15 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் டெல்லி அணியிடம் தோற்றது சிஎஸ்கே: தொடர் தோல்வியால் சென்னை ரசிகர்கள் வேதனை appeared first on Dinakaran.