முதலாவது டி20 போட்டி: நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை

6 months ago 16

தம்புல்லா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி தம்புல்லாவில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இலங்கையின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சக்கரி பவுல்கெஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 27 ரன்கள் அடித்தனர். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக துனித் வெல்லாலகே 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 19 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. அதிகபட்சமாக கேப்டன் அசலன்கா 35 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் சக்கரி பவுல்கெஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

Read Entire Article