6 சவரன் நகைக்காக பெண் கொலை

5 hours ago 2

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் முகமது மற்றும் மைமுனா தம்பதிகள். இவர்கள் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் முகமது அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மதியம் தொழுகையை முடித்துவிட்டு 1 மணிக்கு மேல் வேலைக்கு சென்றார்.

பின்னர் இவர் தனது மனைவிக்கு போன் செய்தார். மைமுனா போனை எடுக்காத நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது மைமுனா முகம், கை, காலகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலை ஆய்வு செய்த போலீசார் பெண்ணின் 6 சவரன் நகைகள் திருடு போனதை கண்டுபிடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 சவரன் நகைக்காக பெண் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article