முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாள்.. அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை!!

3 hours ago 1

சென்னை: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். வாழ்த்தரங்கம், கவியரங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று அண்ணா நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றார். அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்த உள்ளார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், தொண்டர்கள், நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை பெற உள்ளார். பின்னர், கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெறுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் நடத்தி வருகின்றனர்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாள்.. அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை!! appeared first on Dinakaran.

Read Entire Article