முதலமைச்சர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனர்.. அரசின் துரித நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு: அமைச்சர் கே.என்.நேரு!!

3 months ago 15

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனர் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;

*நேற்று ஒரே நாளில் 17 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்கள் 30 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது

*மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது

*சென்னையில் ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

*அதிமுக ஆட்சியில் சுமார் 400 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. தற்போது 782 கி.மீ தூர வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன

*புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்

*அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 398 அம்மா உணவகங்களில் இன்று காலை மட்டும் சுமார் 65,000 பேர் இலவசமாக உணவு அருந்தியுள்ளனர்.

*அதிகாரிகளுக்கு என்னென்ன பணிகள் என்பதை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உத்தரவிட்டிருந்தனர்.

*சென்னையில் கால் படாத இடங்களே இல்லை என்ற அளவுக்கு துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

*கடந்த காலங்களில் வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரியில் இம்முறை எந்த பாதிப்பும் இல்லை.

*தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டுகின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post முதலமைச்சர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனர்.. அரசின் துரித நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு: அமைச்சர் கே.என்.நேரு!! appeared first on Dinakaran.

Read Entire Article