அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசால் ஆபத்து உள்ளது: ப.சிதம்பரம்

12 hours ago 2

மதுரை: அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசால் ஆபத்து உள்ளது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரை கோ. புதூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,

பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்வதாக மோடி கூறுவது ஏற்கத்தக்கதல்ல. நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, மன்மோகன் சிங் வகுத்த பொருளாதார அஸ்திவாரத்தில்தான் மோடி அரசு பயணித்து வருகிறது.

ஏழைகள் கடன்களை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்வதில்லை

விவசாய, கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற ஏழைகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றுவதில்லை. பெரு முதலாளிகளின் பல லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன்களை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்கிறது. அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசால் ஆபத்து உள்ளது.அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.

 

The post அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசால் ஆபத்து உள்ளது: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Read Entire Article