சென்னை: 2025-26 நிதியாண்டிற் கான பட்ஜெட் அறிவிப் பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கிராமப்புறங் களில் 2001ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சேதமடைந்துள்ள வீடுகள் மறுசீரமைப்பு செய்ய முடியாத வீடுகளை புதிதாக கட்டித்தர அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் படி 25,000 புதிய வீடுகள் 2025-26 நிதியாண்டில் ரூ.600 கோடியில் கட்டப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு மறுசீரமைக்க முடியாத வீடுகள் ஒரு வீடு 210 சதுரடியில் ரூ.2.40 லட்சத்தில் மறுகட்டுமானம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 90 நாட்களில் கட்டவும், முதற்கட்டமாக 25,000 வீடுகள் ரூ.600 கோடியில் மறுக்கட்டுமானம் செய்யமுன்மொழியப்பட்டது
இதனை கவனமாக பரிசீலித்த அரசு மறுசீர மைக்க முடியாத வீடு களை புதிதாக கட்டித்தர முதலமைச்சர் வீடுகள் மறுகட்டுமான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியும், ரூ.100 கோடி மாநில அரசின் நிதி மற்றும் திட்டத்திற்கான நிதி ரூ.500 கோடி என மொத்தம் ரூ.600 வழங்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என
அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் 25,000 வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.