முத்துப்பேட்டை, மே 10: திருத்துறைப்பூண்டியிலிருந்து கற்பகநாதர்குளம் கிராமத்திற்கு அரசு பேரூந்து பழையபடி இயங்க கற்பகநாதர்குள மீனவர் கூட்டுறவு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் கடல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராசு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம் கற்பகநாதர்குளம் கிராமம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இங்கு சாலை வசதிகள் இருந்தும் பேருந்து வசதி குறைவாக உள்ளது. இப்பகுதியில் மீனவர்கள் விவசாயிகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு இயக்கப்படும் 14ஏ அரசு பேருந்து திருத்துறைப்பூண்டிலிருந்து காலையில் 9:20 மணிக்கு வரும் பேருந்து கற்பகநாதர்குளம் கட்டிடத்தடி வரை இயங்கபடுகிறதுசாலை சரியில்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டது, தற்பொழுது சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அரசு பேருந்தை, வளவனாறு பாலம் வரை இயக்கினால் கற்பகநாதர்குளம் பொதுமக்கள் மீனவர்கள் மற்றும் வாய்மேடு கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என இவ்வாறு கடல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராசு கோரிக்கை மனுவில் குறிப்படப்பட்டுள்ளது.
The post கற்பகநாதர்குளம் அரசு பேருந்து இயக்க மீனவர் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.