முத்துப்பேட்டை, மே 10: திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை மங்கலூர்மற்றும் கீழ நம்மங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கலெக்டர் மோகனசந்திரன் உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ரிச்சர்ட் ராஜ், மன்னார்குடி கோட்ட உதவி இயக்குனர்டாக்டர்கமலக்கண்ணன் மற்றும் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர்டாக்டர் சாமிநாதன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, நேற்று ஆட்டுக் கொல்லி நோய்க்கு எதிரான இரண்டாவது சுற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமில் நான்கு மாத வயது ஆட்டுக்குட்டி முதல் சினை ஆடுகள் தவிர மற்ற அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இம்முகாமில் முத்துப்பேட்டை தலைமை மருத்துவர்டாக்டர்மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவில் உதயமார்த்தாண்டபுரம், டாக்டர் செல்வகுமார்கால்நடை ஆய்வாளர் நிர்மலா மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மகாலட்சுமி, சத்தியசீலன் ஆகியோர்அடங்கிய மருத்துவ குழுவினர் 500 ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்க்கு எதிரான தடுப்பூசியை செலுத்தினர்.மேலும் ஆட்டுக் கொல்லி நோய் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம், இதன் மூலம் எவ்வாறு நோய் வராமல் தடுக்கலாம் என்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
The post முத்துப்பேட்டை அருகே ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.