சென்னை: முட்டுக்காடு படகு மிதவை உணவகத்தில் பயணிக்க ஒருவருக்கு ரூ.1400 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் அடுத்த முட்டுக்காடு பக்கிங்காம் கால்வாய் முகத்துவார பகுதியில் படகு துறை இயங்குகிறது. இங்கு மோட்டார் படகுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான படகுகள் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படகு சவாரி செய்ய விரும்பு இடமாக திகழ்கிறது.
தற்போது, சுற்றுலாத்துறை மற்றும் கேரளாவை சேர்ந்த தனியார் தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து மிதவை உணவகம் ஒன்றை உருவாக்கி உள்ளன. இந்த மிதவை உணவகம் 125 அடி நீளம் கொண்டதாகவும், இதில் 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிதவை படகில் குழுவாக வருவோருக்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது தனி நபருக்கு அனுமதி அளிக்கும் வகையில் ரூ.1400 கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
The post முட்டுக்காடு படகு மிதவை உணவகத்தில் ஒருவர் பயணிக்க ரூ.1400 கட்டணம் நிர்ணயம் appeared first on Dinakaran.